Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 செப்டெம்பர் 13 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
இதனைக் கவனத்தில்கொண்டு, தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், நேற்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையூடாக தெரிவித்துள்ளார்.
இதன்படி, இப்பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்துவதாயின் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை மாநகர சபை வெளியிட்டியிருப்பதுடன், இவ்விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வியாபார உத்தரவுப்பத்திர அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடல் அனர்த்த பாதுகாப்பு எல்லையிலிருந்து 100 மீற்றருக்கு அப்பால் அமைக்கப்பட்டிருப்பதோடு, அனர்த்தங்கள் ஏற்படும்போது மாணவர்கள் இலகுவாக வெளியேறக்கூடிய நுழைவாயில்களும் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
பிரத்தியேக வகுப்புக்கள் காலை 08 மணி தொடக்கம் பி.ப 01 மணி வரையும் பிற்பகல் 3.15 மணி முதல் பிற்பகல் 6.15 மணி வரையுமே நடத்தப்பட வேண்டும்.
வகுப்புக்கள் நடத்தப்படுகின்ற கட்டடம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக, திறந்த காற்றோட்டம் உள்ளதாக அமைந்திருத்தல் வேண்டும்.
கதிரை, மேசைகள் வயது வித்தியாசத்துக்கு ஏற்ப சொகுசானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருத்தல் வேண்டும். ஆண், பெண் இருபாலாருக்கும் உரிய மலசலகூட வசதிகள் வெவ்வேறாக அமையப் பெற்றிருத்தல் வேண்டும். மலசல கூட வசதியானது 25 மாணவர்களக்கு ஒன்று என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
மாணவர்களுடைய வாகனங்கள், சைக்கிள்களை பாதையோரங்களில் நிறுத்தி வைத்து பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடாது.
பாடசாலையில் பரீட்சை மற்றும் தவனை விடுமுறை வழங்கப்பட்டு, கட்டாயம் ஆகக்குறைந்தது ஒரு வாரகாலத்துக்கு பின்னரே தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். மாதத்தில் வரும் எந்தவொரு பொது விடுமுறை தினத்திலும் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளைகளிலும் வகுப்புக்களை நடத்துவது கூடாது.
கற்பிக்கின்ற பாடங்களின் நேர அட்டவணைகள், ஆசிரியர்களின் விவரங்கள் என்பன உறுதிப்படுத்தப்பட்டு, கல்முனை மாநகர சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago