Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா, வா.கிருஸ்ணா
தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் ஒரு மதரஸா அமைப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.
கோவில் வீதி காணி விவகாரத்தில் எத்தரப்பையும் பாதிக்காத தீர்வே அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் அவ்வாறு தெரிவித்தார்.
கல்முனை தமிழர் பிரதேச காணி சர்ச்சை விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உறுப்பினர் ராஜன் கூறுகையில்:
“தமிழர்கள் செறிந்துவாழும் கல்முனை இரண்டாம் பிரிவில் அமைந்துள்ள கோவில் வீதியில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியை, முஸ்லிம் ஒருவருக்கு அந்த காணி உரிமையாளர் விற்பனை செய்துள்ளார்.
“முஸ்லிம் ஒருவருக்கு காணியை விற்றதால் எழுந்த சர்ச்சையை அடுத்து அந்த காணியை தமிழர் ஒருவரே திரும்பிவாங்க முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் (வி. முரளிதரன்) ஏற்பாடு செய்து, ஒரு பேட்ச் காணியை ஒரு இலட்சம் ரூபாய் வீதம் விற்பனை செய்ய 6 மாதம் கால அவகாசமும் வழங்கப்பட்டு, 8 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் அந்தக் காணியை எந்தத் தமிழரும் கொள்வனவு செய்ய முன்வரவில்லை.
“யாரும் எங்கும் சட்ட ரீதியாக குடியிருக்கலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. அவர்களின் காணியில் அவர்கள் குடியிருக்க முழு உரிமையும் உள்ளது. ஆனால், அந்தக் காணியில் மதரஸா கட்டுவது பொருத்தமான ஒன்றல்ல. தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இவ்வாறு ஒரு மதரஸா அமைப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025