2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வருட ஆரம்ப நிகழ்வுகள்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் 2015ஆம் ஆண்டின் மீளாய்வு, புதிய வருடத்துக்கான வேலைப் பங்கீடு கையளிப்பு மற்றும் சிறந்த உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் விழா ஆகியன வைத்தியசாலையின் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (01) மாலை 04 மணியளவில் இடம்பெறவுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எம்.வாஹிட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி இ. ஸ்ரீதர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், வைத்திய பொறுப்பதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். 

2016ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அங்குரார்ப்பணமும் 'ஆரோக்கியத்துடன் வாழ விரும்புபவர்கள் - ஆயுள்வேதத்துடன் இணைக' என்ற கருப்பொருளைக்கொண்ட தேசிய நிகழ்ச்சித்திட்டமும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் இதன்போது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

மேலும், 2016ஆம் ஆண்டுக்கான அரசாங்க சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் சத்தியப்பிரமாண உறுதிமொழியும் இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X