Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 நவம்பர் 09 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
“தமிழ் தரப்பினர் விரும்பாதவரை பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் ஒருபோதும் கிடைக்கவே கிடைக்காது. எனவே, அதற்கான சகல ஒத்துழைப்புக்களை தமிழ் கூட்டமைப்பினர் தரவேண்டும்” என சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
மேலும், “பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் கொடுப்பதாக இருந்தால் கல்முனைக்கு இன்மொரு கல்வி வலயம் தர வேண்டும் என்று தமிழ் தரப்பினர் கோருகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொத்துவில் அல் இர்பான் மகளீர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை செவ்வாய்க்கிழமை (08) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“எமது சிறுபான்மை சமுகங்கள் ஒற்றுமையாக இருக்கும் வரை எமது சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய சகல அதிகாரங்களும் கிடைக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமே இல்லை.
பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் கொண்டு வரும் முயற்சிக்கு சகல ஒத்துழைப்புக்களையும் தமிழ் கூட்டமைப்பினர் தரவேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025