2025 மே 01, வியாழக்கிழமை

திடீரென மாறிய அம்பாறை வானிலை

Princiya Dixci   / 2021 மார்ச் 10 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன்  வானிலை மாற்றம் திடிரென ஏற்பட்டமையால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். சில இடங்களில் மழை குறைந்து, காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதுடன், மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை,  நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று பகுதிகளில் இன்று (10) திடீரென கடும் மழையுடன் காற்று வீசியது. இதனால் வீதியால் பயணம் செய்த பொதுமக்கள் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

சில இடங்களில் புழுதியுடன் கூடிய காற்று வீசியதுடன் விளம்பரப் பலகைகளும் சேதமடைந்தன. கடற்கரையோரங்களில் உள்ள தென்னை மரங்கள் அகோர காற்றால் ஓலைகளை இழந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .