2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திண்ம முகாமைத்துவத்துக்கு ஐ.நா. அபிவிருத்தி அனுசரணை

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகற்றல் நடவடிக்கையையும் மேம்படுத்துவதற்கான அனுசரணையை வழங்க ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனம் முன்வந்துள்ளது.

இத்திட்டம் தொடர்பான துறைசார் நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம், கல்முனை மாநகர சபையில், மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இன்று (05) நடைபெற்றது.

இதன்போது குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான விஞ்ஞான, தொழில்நுட்ப பொறிமுறைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் திண்மக் கழிவு மற்றும் மருத்துவக் கழிவு என்பவற்றை வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்வதற்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் முன்னோடித் திட்டத்துக்கமைவாக முதற்கட்டமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் மொனராகல மாவட்ட பொது வைத்தியசாலை என்பனவும் அதனோடிணைந்ததாக கல்முனை மாநகர சபை மற்றும் மொனராகல பிரதேச சபை என்பனவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .