2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

திருக்கோவில் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய கும்பாபிஷேகம்

எஸ்.கார்த்திகேசு   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க “ஈழத்துச் திருச்செந்தூர்” எனப் போற்றப்படும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தின் புணரமைப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கும்பாபிஷேகத்தை, எதிர்வரும் ஆனி மாதம் 25ஆம் திகதி நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என, ஆலய வண்ணக்கர் வ.ஜயந்தன், ஆலயத் தலைவர் எஸ்.சுரேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், எதிர்வரும் ஆனி மாதம் 18ஆம் திகதி கும்பாபிஷேகத்துக்கான கிரியைகள் ஆரம்பமாகி, 23, 24ஆம் இரு தினங்கள் எண்ணெய்க்காப்புச் சாத்தும் நிகழ்வு இடம்பெற்று, 25ஆம் திகதி, மஹா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில், மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

ஆலய நிர்வாகம், குப்பாபிசேஷ குழு, ஆலயத் திருப்பணிக் குழு என்பன ஒன்றிணைந்து, இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக, ஆலய வண்ணக்கர் வ.ஜயந்தன் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆலயத்தின் திருப்பணிகளுக்குப் பங்களிப்புக்களைச் செய்ய விரும்பும் பொதுமக்கள், தங்களால் முடிந்த உதவிகளை, ஆலய நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு வழங்குமாறு, ஆலய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .