Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே. றஹ்மத்துல்லா, எஸ்.எம்.இர்ஷாத், எம்.எல்.எஸ்.டீன்
கரும்புச் செய்கைக்குத் திணிக்கப்பட்ட செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு, அரசாங்கம் உடனடித் தீர்வை வழங்க வேண்டுமெனக் கோரி, ஒன்றிணைந்த விவசாயிகள் அமைப்பால், அக்கரைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக இன்று (12) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
சீனித்தொழிற்சாலையை நடத்தி வருகின்ற கல்லோயாவிலுள்ள தனியார் கம்பனியொன்று, தனது தனிப்பட்ட இலாபத்தை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குற்றஞ்சாட்டினர்.
இதனால், அம்பாறை மாவட்டத்தில் கரும்புச் செய்கையை மேற்கொண்டு வரும் 70 சதவீதமான விவசாயிகள் தொடர்ந்து நட்டத்துக்குள்ளாகி, கடனாளிகளாக்கப்பட்டு வருவதாக, நுரைச்சோலை விவசாயிகள் அமைப்பின் தலைவர் ஏ.எல்.மஹ்றூப் தெரிவித்தார்.
கரும்புச் செய்கையில் பாரிய நட்டத்தை எதிர்நோக்கி வருவதால், நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி நின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் சுமார் 5,200 ஹெக்டெயர் காணியில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவற்றை குறித்த தனியார் கம்பனியே முன்னெடுத்துச் செல்கின்ற அதேவேளை, கரும்புச் செய்கைக்கான உள்ளீடுகள், உபகரண வசதிகள், கடன் வசதிகளை வழங்கி, கூடுதலான வட்டியில் பண அறவீடுகளை மேற்கொண்டு வருவதாக, கரும்புச் செய்கையாளர்கள் தெரித்தனர்.
இதேவேளை, தீகவாவியில் சுமார் 2,500 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடுவதற்கு கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் இம்முறை அது மறுக்கப்பட்டு, கரும்பு செய்கையை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர்கள் தெரிவித்தார்.
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago