2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல்

Freelancer   / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வந்த சம்பத் மனம்பேரியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி, சம்பத் மனம்பேரி எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரை எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .