2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தீ அனர்த்த ஒத்திகை

Princiya Dixci   / 2022 மார்ச் 16 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

தீ அனர்த்தத்தின் போது பொதுமக்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்முறை பயிற்சி, அக்கரைப்பற்று பஸ் தரிப்பிட நிலையத்தில் இன்று (16) இடம்பெற்றது.

அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு செயற்பாட்டில் அதிகளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை இராணுவத்தினர், பொலிஸார், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை,  அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தன.

இவ்விழிப்புணர்வு செயற்பாட்டில் அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் அதாவுல்லா அஹமட் சகி மற்றும் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது பஸ் தரிப்பிடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டு, தீயை கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர் சம்பவத்தில் காயமுற்றவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கும் செயற்பாடுகளும் செயற்பாட்டு ரீதியாக காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து காயமுற்றவர்களை வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் முறைகள் தொடர்பிலும் காண்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .