2025 மே 19, திங்கட்கிழமை

‘தூரமாக்கும் நோக்கில் அவதூறு பரப்புகின்றனர்’

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, எஸ்.அஷ்ரப்கான்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தன்னைத் தூரமாக்கும் நோக்கில் பல சதித்திட்டங்களைத் தீட்டி, போலியான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் கூட்டாக இணைந்து சாய்ந்தமருது மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் என்று நான் கூறியதாக போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் கூறப்பட்ட விடயங்கள் யாவும் போலியானதாகும். இதனை நான் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“இவ்வாறான போலிச் செய்திகளை பரப்பி, என்னையும் எனது கட்சியின் ஆதரவாளர்களையும் குளப்பி, எனது வாக்கு வங்கியைக் குறைக்கும் நோக்கில் சில தீய சக்தியினர் செயற்பட்டு வருகின்றனர்.

“இவ்வாறு போலியான செய்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன்” என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X