எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடம் மற்றும் பொறியல் பீடம் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களை வெளியேற்றியதைக் கண்டித்தும், அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (16) பல்கலைக்கழக ஒலுவில் வளாக நிர்வாக கட்டடத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியாளனே, மாணவர்களின் தடையை உடனடியாக நிறுத்து, மாணவர்களின் சுதந்திரத்தினை பறிக்காதே, உரிமையை வழங்கு, மாணவர்களை அடக்கி ஆளும் முறையினை நிறுத்து, மாணவர்களின் பரீட்சைத் தடையை மீண்டும் பெற்றுக் கொடு, மாணவர்களின் வாழ்க்கையை பிரிச்சினைக்குள்ளாக்காதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பாதாதைகளை ஏந்தி போரட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் தடையை நீக்கக் கோரியுமே இக் கண்டணப் பேரணி முன்னெடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர் நடவடிக்கை குழுவினர் தெரிவித்தனர்.
4 minute ago
12 minute ago
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
24 Jan 2026
24 Jan 2026