2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்காவை தாக்கும் பனிப்புயல்

Freelancer   / 2026 ஜனவரி 25 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட கடும் பனிப்புயல் காரணமாக, நாடு முழுவதும் 84,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.

மின்சார விநியோகத்தைக் கண்காணிக்கும் ‘PowerOutage.com’ இணையதளத்தின் தரவுகளின்படி, பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, டெக்சாஸ் மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 43,000 இற்கும் அதிகமான பாவனையாளர்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளனர்.

லூசியானாவில் 6,000 குடும்பங்களும், ஆர்கன்சாஸ்சில் 5,000 குடும்பங்களும் கலிபோர்னியாவில் சுமார் 4,000 குடும்பங்களும் மின்சார விநியோகமின்றித் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X