Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 03 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, யூ.எல். மப்றூக்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை, கால வரையறையின்றி மூடியுள்ளதாக, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
பல்கலைக்கழகப் பீடாதிபதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், பொறியியல் பீடத்தைக் கால வரையறையின்றி மூடுவதற்கான முடிவை நேற்றிரவு தாம் எடுத்ததாகவும் உபவேந்தர் தெரிவித்தார்.
இதனையடுத்து, பொறியியல் பீட மாணவர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தைத் தடை செய்யப்பட்ட பகுதியாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளதோடு, பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள பொறியியல் பீட மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த பொறியியல் பீட மாணர்களில் கணிசமானோர் பல்கலைக்கழகத்தை விட்டும் வெளியேறியுள்ளதாகவும், ஆனால், ஒரு குழுவினர் தொடர்ந்தும் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தினுள்ளிருந்து மறியல் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் உபவேந்தர் நாஜிம் கூறினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவு இயங்கிவரும் கட்டடத்தினுள் நுழைந்து, கடந்த புதன்கிழமை முதல், தொடர்ச்சியான மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த சேர்ந்த 05 மாணவர்களுக்கு, பல்கலைக்கழக நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை இரத்துச் செய்யுமாறு கோரி, இந்த மறியல் போராட்டத்தை இவர்கள் நடத்தி வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago