Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
'முறைகேடாண புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தால் ஏற்படப்போகும் பேராபத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவோம்' எனும் தொனிப்பொருளிலான தேசிய காங்கிரஸின் பாலமுனைப் பிரகடனம் நாளை (29) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தினால் சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு மற்றும் தேசிய காங்கிரஸின் பாலமுனை பிரகடனம் தொடர்பாக, நேற்று (27) மாலை அக்கரைப்பற்று தேசிய காங்கிரஸ் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“நாட்டு மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக மக்களை தெளிவூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாலமுனைப் பிரகடனத்தில், சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் மற்றும் புத்திஜீவிகள், கல்விமான்கள், சமயத் தலைவர்கள் கலந்து கொள்ளுமாறு, திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பிரகடனத்துக்கு ஆதரவான சகலரும் இதில் கலந்து கொள்ளலாம்.
“சிறுபான்மை சமூகத்துக்கு விருப்பம் இல்லாத இந்த அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை, அரசாங்கம் மீள பெற வேண்டும் என அன்றைய தினத்தில் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
“இந்த யாப்பு இந்நாட்டுக்கு போறுத்தமில்லை என்பவர்கள் இப்பிரகடனத்தில் கலந்துகொள்ளலாமென பகிரங்கமாக அழைப்பு விடுகின்றேன்.
“புதிய யாப்பு சீர்திருத்தத்தினால் நாட்டில் பாரிய தாக்கம் ஏற்படப் போகின்றது. அதற்காக கட்சி பேதத்துக்கு அப்பால் தேசிய காங்கிரஸ் நாட்டினதும், மக்களினதும் நலனுக்காக உளச்சுத்தியுடன் பேசி வருகின்றது.
“இப்பாலமுனை பிரகடனத்தில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்று சேர்ந்து தமிழ், முஸ்லிம் சமூகத்தின் குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும்” என்றார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago