Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 நவம்பர் 22 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, பொத்துவில், அறுகம்பை, களப்புக்கட்டு ஆற்றில் தொடர்ந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடலாமென, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மலீக், இன்று (22) தெரிவித்தார்.
கடந்த 19ஆம் திகதி, அறுகம்பை களப்புக்கட்டு ஆற்றில் மீன்கள் இறந்து காணப்பட்டதோடு, மயக்க நிலையிலும் காணப்பட்டிருந்தன.
இதனையடுத்து, இம்மீன்களை நன்னீர் மீனவர்கள் பிடிக்க வேண்டாமென தற்காலிகமாகத் தடைவிதிக்கப்பட்டதுடன், விற்பனை செய்ய வேண்டாமெனவும், பொதுமக்கள், நன்னீர் மீன் வகைகளை உட்கொள்ள வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
“கடும் வரட்சி காரணமாக, ஆற்று நீரில் உப்பின் செறிவு கூடுதலாகக் காணப்பட்டிருந்தது. இதனால், திடீரென பெய்த மழையின் காரணமாக மீன்கள் இறந்தும், மயக்க நிலையிலும் காணப்பட்டன. தற்போது உப்பின் செறிவு குறைவாகக் காணப்படுகின்றது. எனவே, இவை வழமைக்குத் திரும்பியுள்ளன” என பொதுச் சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
6 hours ago
24 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
24 Sep 2025