Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 27 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையால் மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உள்ளிட்ட தாழ்நிலப்பகுதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதுடன், சில குடியிருப்புகளும் பாதிக்கப்பட்ட நிலையில், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை நிலையும் வெகுவாக முடக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் என்பதுடன் வீதிகள், வயல் வெளிகள் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேச செயலக அலுவகத்தின் ஒரு பகுதிக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதனால் அலுவலக நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதுடன், பரீட்சைக்காக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் அசௌகரியங்குள்ளான நிலையில் சில அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வருகையும் குறைந்து காணப்பட்டது.
மழை நீடிக்கும் பட்சத்தில் அனர்த்தத்தைத் தவிர்க்கும் முகமாக ஆலையடிவேம்பின் நீர் வடிந்தோடும் முகத்துவாரப்பிரதேசம் வெட்டப்பட வேண்டிய நிலை உருவாகலாமென, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
5 hours ago
30 Apr 2025