Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண அரச வைத்தியசாலைகளில், சுமார் 15 வருடகாலம் சுகாதார சேவையில், தொண்டர்களாகச் சேவையாற்றியவர்களைப் புறந்தள்ளிவிட்டு, இவ்வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றமை கண்டிக்கத்தக்க விடயமென, கிழக்கு மாகாண சுகாதார தொண்டர் அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு, அக்கரைப்பற்று ஏசியன்செப் கூட்ட மண்டபத்தில், இன்று (25) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்
அங்கு அவர் தொடர்ந்துரையாற்றுகையில், “கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய மூவினங்களைச் சேர்ந்த 219 பேர், அரச வைத்தியசாலைகளில் சுமார் 15 வருடங்களாக சுகாதாரத் தொண்டர் சேவையாளர்களாக, எவ்விதக் கொடுப்பனவுமின்றி, அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்துள்ளனர்.
“இவர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்பில், கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சியின்போது பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுவந்துள்ள போதிலும், எந்தவொரு நிரந்தர நியமனமும் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டது.
“தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்துக்கு, நாங்கள் பூரண ஆதரவு வழங்கியவர்கள் என்ற வகையில், ஜனாதிபதி, பிரதமர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர், இவர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு ஆவன செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago