2025 மே 03, சனிக்கிழமை

தொற்றுப் பரவல் அச்சுறுத்தல்; தபால் நிலையங்களுக்கு பூட்டு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில், கல்முனை பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல்களால் தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை (12) தபால் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள் வெளியாகியதை தொடர்ந்து, மூவர் தற்போது வரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சேனைக்குடியிருப்பு, பாண்டிருப்பு, கல்முனை பகுதியை சேர்ந்த தபால் விநியோகிக்கும் ஊழியர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழம முதல்  தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும், மூடப்பட்டுள்ள தபால் நிலையங்கள் இம்மாதம் 26ஆம் திகதியளவில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தற்போது  அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதான தபாற்கந்தோர் உட்பட 7 தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X