2025 மே 02, வெள்ளிக்கிழமை

தொலைத் தொடர்பாடல் கோபுரத்துக்கு எதிர்ப்பு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 மார்ச் 26 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் தனியார் தொலைத் தொடர்பாடல் கோபுரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதி மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு, பொது அமைப்புகளின் ஒன்றியத்தால் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

குறித்த தனியார் தொலைத் தொடர்பு கோபுரத்தால், அட்டாளைச்சேனை, 11ஆம் பிரிவின் மக்காமடி வீதிக் குடியிருப்பாளர்கள் உட்பட அதனைச் சுற்றியுள்ள மக்கள், பல்வேறு அசௌகரியங்களுக்கும் சுகாதார அச்சுறுத்தலுக்கும் சவாலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அம்மகஜரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை இளைஞர் கழகங்கள், மகளிர் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் என்பன இணைந்து, பொதுமக்களின் கையெழுத்தையும் பெற்று, இவ்வேலைத்திட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு, கோரிக்கை விடுத்து, இம்மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“சன நெருசல் மிக்க இப்பிரதேசங்களில் பாரியளவிலான தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைப்பதற்கு, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை அனுமதி வழங்கி இருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

“இவ்வாறான, செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. ​ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்க்கமான செயற்றிட்டங்களை அமுல்படுத்தி, சட்டங்களைக் கொண்டுவர ​வேண்டும்” என, மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தை இடைநிறுத்தி, மக்கள் குடியிருப்பு அற்ற பிரதேசங்களுக்கு மாற்றியமைக்குமாறும், அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X