2025 மே 03, சனிக்கிழமை

தொழிற்பயிற்சி கற்கைகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.நிப்றாஸ்

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிநெறிகளை தொடர்வதற்காக இளைஞர், யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  

தமிழ் மொழிமூலத்தில் இயங்கும் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சம்மாந்துறை, காரைதீவு, மத்தியமுகாம், சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள, 1 வருட மற்றும் 6 மாதகால  கற்கைகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

இதற்கமைய, கணிய அளவையியல் டிப்ளோமா, இலத்திரனியல் உபகரண தொழில்நுட்பவியலாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், கணினி வன்பொருள் தொழில்நுட்பவியலாளர், மின்னியலாளர், குளிரூட்டி மற்றும் வாயுச்சீராக்கி திருத்துநர், வாகன திருத்துநர், அலுமீனியம் பொருத்துநர், செயலாண்மைப் பயிற்சி, நிர்மாணக் கைவினைஞர், கணினி படவரைஞர், உணவு மற்றும் பானங்கள் பரிமாறுபவர், விடுதி அலங்கரிப்பாளர், அதிவேக தையல் இயந்திர இயக்குநர், ஆடைத் தொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டாளர், தையல், உருக்கி ஒட்டுநர், மரக் கைவினைஞர், பேக்கர், மோட்டார் சைக்கிள் திருத்துநர், எலக்ட்ரிக் மோட்டர் வைண்டர், நீர்க்குழாய் பொருத்துனர் உள்ளிட்ட பயிற்சிநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தபால் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள், தங்களது அலைபேசியில் தொழிற்பயிற்சி அதிகார சபையின் பிரத்தியேக செயலியை (App) பயன்படுத்துவதன் மூலமோ பேஸ்புக் ஊடாகவே இப்பயிற்சிநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். 

அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.பி.நளீம் இதுபற்றி கூறுகையில், “கொவிட்-19 தொற்று நிலைமைகளைக் கருத்திற்கொண்டே நாம் இணைய வழிமுறை ஊடாக வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியிருக்கின்றோம்.  இந்த வாய்ப்பை இளைஞர், யுவதிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X