Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இவ்வாரம் முதல் நடைபெறவுள்ளதாக, பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்களில் சுமார் 2,600 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் ஒரு ஏக்கர், அதற்கு குறைவான காணித் துண்டு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பித்த 900 பேருக்கு முதற்கட்டமாக நேர் முகப் பரீட்சை கட்டம் கட்டமாக நடைபெறவுள்ளதாகவும், இவர்களுக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேர்முகப் பரீட்சையின் போது தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நிழற்பட பிரதி, வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்காக கிராம் அலுவலரால் வழங்கிய சான்றிதழ், தொழில் முயற்சியினை தொடங்குவதற்கு தமக்கு சொந்தமான காணி இல்லையெனில் அது தொடர்பாக உறுதிப்படுத்துவதற்கு சத்திய கடதாசி சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago