Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 நவம்பர் 11 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,பைஷல் இஸ்மாயில்,வடிவேல் சக்திவேல்
கல்முனை நகரிலிருந்து அம்பாறை நகருக்கு மாற்றப்படவிருந்த தேசிய கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபையின் அலுவலக இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கல்முனையில் இதுவரைகாலமும் இயங்கிவந்த தேசிய கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபை அலுவலகம் அம்பாறைக்கு இடமாற்றப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு விடுத்த வேண்டுகோளை வாழ்க்கை தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஏற்றுகொண்டு இந்த இடமாற்றத்தை நிறுத்தியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹவுடன் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தொழில் வாய்ப்பு அற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தமது வாழ்க்கை தொழிலுக்காக பல சேவைகளை செயற்படுத்திவந்த ஒரு நிறுவனம் தூர இடம்மொன்றுக்கு இடம்மாற்றம் செய்யப்படுவதனால் ஏற்படும் அசொளகரியங்கள் மற்றும் இத் தொழிற்கல்வியின்பால் இளைஞர் யுவதிகளை தூரமாக்கிவிடும்.
இந்த அலுவலக இடமாற்றத்தை நிறுத்த வேண்டும் என பலரும் என்னிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து இப் பிராந்திய காரியாலயத்தை இடம்மாற்றுவதை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என நான் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹவிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
அந்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக அலுவலக இடமாற்றத்தை நிறுத்துமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்' என்றார்.
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago