Princiya Dixci / 2020 நவம்பர் 11 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

“நீண்ட காலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அம்பாறை மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து, தனித்துவத்தை காட்டியுள்ளோம்” என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
“அம்பாறை மாவட்ட மக்களை எனது இதயத்தில் இருந்து பிரிக்க முடியாது. நானும் கைவிட்டுப் போக மாட்டேன்” எனவும் அவர் கூறினார்.
அம்பாறை - நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வேப்பையடியில் பிரதம அமைச்சரின் விசேட இணைப்பாளர் அலுவலகத்தை, இன்று (11) காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாம் நாடாளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்கள் சேவை செய்யும் வாய்ப்பை எனக்குப் பெற்று தந்துள்ளார். இதன்படி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை என்னை நம்பி ஒப்படைத்துள்ளார். இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேலும் பல மாற்றங்களை இந்தப் பிரதேசங்களில் கொண்டு வருவேன்” என்றார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்த கலையரசன் என்பவருக்கு பதவியை (தேசிய பட்டியல்) கொடுத்துள்ளது. அவர் வாகனத்தில் பவனி வருகின்றார். அவர் ஒரு வேலைத்திட்டம் அம்பாறையில் செய்தால் நான் திரும்பிச்சென்று இருப்பேன். ஒன்றுமே செய்யப்போவதில்லை. மக்களை ஏமாற்றவே இருப்பை தக்க வைக்க முயல்கின்றனர்.
“அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். இதனை ஒரு இனவாதமாக எவரும் பார்க்க கூடாது” என்றார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026