Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 23 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தோல்வியடைந்தால், அது தமிழர்களின் தோல்வியாகவே கருதப்படுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் கோவிலுக்கு இன்று (23) ஆதரவாளர்களுடன் வருகைதந்து, வழிபாடுகளை மேற்கொண்ட அவர், மாமாங்கம் பகுதிகளில் தனது தேர்தல் பிரசார பணிகளை மேற்கொண்டார்.
இதன்போது உரையாற்றிய கருணாகரம், “தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து தமிழ் மக்களின் அரசியல் குரலாக தமிழ் மக்களின் தேவைக்காக இன்று வரை பல வழிகளிலும் போராடிக்கொண்டிருக்கின்றது.
“கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை தட்டிக் கேட்பதற்கும் அதற்கொரு நிரந்தர தீர்வை உருவாக்குவதற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது ஒரு பேரம் பேசும் சக்தியாக வட, கிழக்கில் திகழவேண்டிய தேவை இருக்கின்றது.
“இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது தோல்வியடைந்தால் அது தமிழ் மக்களின் தோல்வியாகவே கருதப்படும்” என்றார்.
18 minute ago
21 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
26 minute ago