2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஜெம்பட்டா வீதி ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நவா வரண ஸ்ரீ சக்கர பூஜை

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு ஜெம்பட்டாவீதி அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு  திங்கட்கிழமை (22) அன்று மாலை நவா வரண ஸ்ரீ சக்கர பூஜை நடைபெற்றது.

சர்வதேச இந்துமத பீட இணைப்பாளரும் கொழும்பு ஜெம்பட்டாவீதி ஸ்ரீ முனீஸ்வரர் முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதம குருவுமான கலாநிதி சிவஸ்ரீ எஸ்.சிவநேசன் குருக்கள் தலைமையில் முன்னேஸ்வரம் வடிவாம்பிகா சமேத முன்னைநாத பெருமான் ஆலய உற்சவகால பிரதமகுரு சிவஸ்ரீ சிதம்பர ஹரிஹர குருக்கள் பூஜை வழிபாடுகளை நடாத்தினார்.

சாரதா நவராத்திரி விழாவும் நவாவரண ஸ்ரீ சக்கர பூஜையும் நவசக்தி மஹா ஹோமமும் இன்று தொடக்கம் எதிர்வரும் 1ம் திகதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும்.

தினமும் மாலை கும்ப பூஜை, நவாவரண ஸ்ரீ சக்கர பூஜை, முத்தேவியர் ஹோமம், சாயரட்ச பூஜை, வசந்த மண்டப பூஜை, விசேட தீப ஆராதனை, வேத தோத்திர பாராயணம் என்பன நடைபெறும்.

22ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை ஸ்ரீ துர்க்கா பூஜையும் 25ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை ஸ்ரீ லக்ஷமி பூஜையும் நடைபெறும்.

எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை ஸ்ரீ சரஸ்வதி பூஜை நடைபெறும்.

எதிர்வரும் 1ம் திகதி புதன்கிழமை காலை விசேட கலாசாபிஷேகம் நடைபெறும்.

மாலை மானம்பூத்திருவிழா நடைபெறும். தொடர்ந்து பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும்.

மானம்பூ திருவிழா ஊர்வலம் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஜம்பட்டா வீதி, ஜம்பட்டா ஒழுங்கை, ஜோர்ஜ் ஆர்.டி சில்வா மாவத்தை, சிவானந்தா வீதி சந்தியில் மானம்பூத்திருவிழா நடைபெறும்.

எதிர்வரும் 2ம் திகதி காலை விஜயதசமி வித்தியாரம்பம்(ஏடு தொடக்கல்) நடைபெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .