2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஜனாதிபதி- வோல்கர் டர்க் இடையே சந்திப்பு

Editorial   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk)   இடையிலான சந்திப்பு  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அலுவலகத்தில்   அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை அமோகமாக வரவேற்றதுடன் கடந்த வருடத்தில் மனித உரிமை தொடர்பில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டது. 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும்  ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர  பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரியவும் இந்நிகழ்வில்  கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .