2025 மே 01, வியாழக்கிழமை

த.தே.கூவின் மே தினக் கூட்டம்

Thipaan   / 2017 மே 01 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன், வி.சுகிர்தகுமார், எஸ்.கார்த்திகேசு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம்,  கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பேரணி, அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாகச் சென்று மே தினக் கூட்டம் நடைபெறும் மைதானத்தினை வந்தடைந்தது.

"தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம், இலங்கைத் திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம் சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம், தொழிலாளர் தம் வாழ்வு வளம்பெற கைகொடுப்போம்" எனும் தொனிப்பொருளிலேயே கூட்டம் இடம்பெறுகிறது.

இந்நிகழ்வுக்கு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.கூட்டமைப்பின் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில்,  தமிழர்களின் பாராம்பரியத்தை ஞாபகமூட்டும் வகையிலான அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளும் வருகை தந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாக இணைந்து கொண்டனர்.

தொடர்ந்து அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் பலத்த பாதுகாப்பின் மத்தியில் மாபெரும் கூட்டமும் இடம்பெற்றுவருவதுடன், அரசியல் தலைவர்களின் உரை இடம்பெற்று வருகிறது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .