Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 25 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வனவிலங்கு கணக்கெடுப்பு அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது பொதுமக்கள் வழங்கிய தகவல்களில் சுமார் 50 சதவீதமானவையே துல்லியமானவை என கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிடைத்த புள்ளிவிபரவியல் தகவலின் அடிப்படையில், மக்கா குரங்குகள்5,197,517, குரங்குகள் 1,747,623, முள்ளம்பன்றிகள் 2,666,630 மற்றும் ராட்சத அணில்கள் 4,285,745 உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவில் ஆறு கிராம அலுவலகர் பிரிவுகளில், மக்கா குரங்குகள், குரங்குகள், முள்ளம்பன்றிகள் மற்றும் ராட்சத அணில்கள் இல்லாததால், கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago