2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி யானை மரணம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 04 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் வன ஜீவராசிகள் அலுவலகப் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் ரூவஸ்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (04) காட்டு யானையொன்று மரணமடைந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் திருக்கோவில் பிரதேச அலுவலக அதிகாரி ஏ.ஏ.ஹலீம் தெரிவித்தார்.  

கடந்த மூன்று தினங்களுக்கு முதல் துப்பாக்கிச்சூட்டுக்கு இழக்காகி வலது காலில் காயமடைந்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த யானை மரணமடைந்துள்ளதாகவும் யானையின் மற்றைய காலின் அடிப்பாகம் மிதிவெடியில் சிக்குண்டு காயமடைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் 12 காட்டு யானைகள் மரணமடைந்துள்ளதாக திருக்கோவில் பிரதேச வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X