2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் தையல் பயிற்சியை நிறைவு செய்து, சுயதொழிலில் ஈடுபடுவற்கு தயாராக இருந்த வறிய குடும்பங்களைச் சேர்ந்த 31 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், நேற்று திங்கட்கிழமை (12) வழங்கி வைக்கப்பட்டன.

இந்த உயர் ரக தையல் இயந்திரங்கள் ஒவ்வொன்றும் தலா 39,000 ரூபாய் பெறுமதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டிப்பளை பிரதேச செயலகமும் வேர்ள்ட்விஷன் நிறுவனமும் இணைந்து இக்குடும்பங்களின் வாழ்வாதார சுயதொழில் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.

பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், வேர்ள்ட்விஷன் நிறுவன பட்டிப்பளைப் பிராந்திய முகாமையாளர் ஜி.ஜே.அனுராஜ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பயனாளிக் குடும்பங்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X