Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மார்ச் 24 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 100 புதிய வீடுகள் பயனாளிகளிடம் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் நாளைமறுதினம் சனிக்கிழமை முதற்கட்டமாக கையளிக்கப்படவுள்ளன.
தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் 126 வீடுகளும் கஞ்சிகுடியாறுக் கிராமத்தில் 75 வீடுகளும் மீள்குடியேறிய மக்களுக்காக கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீடும் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியில் இரண்டு அறைகள், ஒரு வரவேற்பு அறை ஆகியவற்றைக் கொண்டதாக கட்டப்படுகின்றன.
இந்நிலையில், இந்த வீடுகளுக்குரிய அனுமதிப்பத்திரங்களை கையளிக்கும் நடவடிக்கையானது திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் தங்கவேலாயுதபுரக் கிராமத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் புதிய கலாசார மண்டபத்துக்காகவும் ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் பொதுக் கட்டடத்துக்காகவும் அமைச்சரால் அடிக்கற்கள் நாட்டப்படவுள்ளன.
மேலும், பல நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ள அமைச்சர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களிலுள்ள மக்களின் குறைநிறைகள் தொடர்பிலும் கேட்டறியவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .