2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

திருக்கோவிலில் கடலரிப்பை ம.வி.மு. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பார்வை

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக இன்று செவ்வாய்க்கிழமை சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் மீனவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

சங்கமன்கண்டிக் கிராமம்; முதல் தம்பட்டைக் கிராமம்; வரையான சுமார் 40 கிலோமீற்றர் தூரம், கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள கடலரிப்புக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.  

இக்கடலரிப்புக் காரணமாக வள்ளங்களை நிறுத்துவதற்கான இடவசதி இன்மை மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளதுடன், கட்டடங்களும் தென்னை மரங்களும்; அழிவடைகின்றன எனவும் மீனவர்கள் கூறினர்.

இக்கடலரிப்புப் பிரச்சினை தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதுடன்,  நாடாளுமன்ற அமர்வின்போதும், கடலரிப்புப் பிரச்சினை முன்வைப்பதாக ம.வி.மு. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X