2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 27 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று வந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் நகரிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகளில் இரவு வேளைகளில் உடைத்து பொருட்கள் மற்றும் பணம், நகைகள் என்பன திருடப்பட்டு வந்தன.

நேற்று வியாழக்கிழமை (26) இரவு வீடு ஒன்றை உடைத்து திருட முற்பட்டபோது, இவர்கள் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .