Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
மாணவர்களின் எதிர்கால நலனைக் கருதித்தில் கொண்டு, பொத்துவில் மத்திய கல்லூரியில், உயர் தரத்தில் தொழினுட்பப் பிரிவை ஆரம்பிக்க, கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர், முதலமைச்சர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் கடந்த வெள்ளிக்கிழமை (16) பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாறை, பொத்துவில் மத்திய கல்லூரி ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளீர்க்கப்பட்டுள்ள ஒன்றாகும். இப்பாடசாலையில் இதுவரை காலமும் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிக்கப்படாமலிருப்பதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள 1ஏபி பாடசாலைகளுள் ஒன்றாக பொத்துவில் மத்திய கல்லூரி விளங்குகின்றது. பொதுப் பரீட்சை பெறுபெறுகளின் பிரகாரமும் இணைக்கலைத்திட்ட செயற்பாடுகள் மூலம் அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குப் பெருமை தேடிக் கொடுக்கின்ற பாடசாலைகளில் ஒன்றாக விளங்குகின்றது.கால ஓட்டத்தில் கல்விச் செயற்றிட்டங்களில் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்ளும் முகமாகக் கல்வி அமைச்சு உயர் தர விஞ்ஞானப் பிரிவுடன், ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் இணைக்கப்பட்ட பாடசாலைகளில் உயர் தர தொழில்நுட்ப அலகை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.
ஆனால், பொத்துவில் மத்திய கல்லூரியில் இதுவரை காலமும் உயர் தரத்தில் தொழிநுட்ப பிரிவு ஆரம்பிக்கப்படாமையினால், பொத்துவில் பிரதேச மாணவர்கள் 50 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று உயர் தர தொழிநுட்பக் கல்வியைப் பயில வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெற்றோர்களும் பொருளாதார ரீதியாகப் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago