2026 ஜனவரி 26, திங்கட்கிழமை

நஞ்சூட்டப்பட்ட உணவுப் பாவனை; முஸ்லிம்களே அதிகளவு பாதிப்பு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இரசாயன நஞ்சூட்டப்பட்ட உணவுப்பாவனை, இலங்கையில் அதிகரித்து வருகின்றது. இதனால் தொற்றா நோய்களின் அதிக தாக்கத்துக்கு, எமது நாடு முகங்கொடுத்து வருகின்றது” என சட்ட வைத்திய நிபுணர் கே.எஸ்.தஹதநாயக தெரிவித்தார்.

 

“வைத்திய ஆய்வுகளின்படி, இலங்கையில் முஸ்லிம்களே அதிகமான நோய்களுக்கு உள்ளாகின்றார்கள். இது 43 சதவீதமாகக் காணப்படுவதுடன்,  சகோதர இனத்தைச் சேர்ந்தவர்கள் 23 சதவீதமாகவும் தமிழா்கள் 20 சதவீதமாகவும் இந்நோயின் தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர்” என்றும் அவர் கூறினார்.

“ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப, நிரந்தரமானத் தீர்வு” எனும் தொனிப்பொருளில், 'ஹெலசுவய' அமைப்பால், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில், பிரதான வளவாளராகக்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்காக, இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“எமது முன்னோர்கள் விவசாயத்துக்கு எந்தவிதமான இரசாயனப் பயன்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. அக்காலத்தில் வாழ்ந்த பராக்கிரம மன்னன், இரசாயன பயன்பாடின்றி மேற்கொண்ட விவசாயத்தின் மூலம், 60 மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்திருந்தார்.

“விவசாயத்துக்கு பயன்படுத்தும் கிருமிநாசினியிலுள்ள ஆசனிக்,  இராசாயன நஞ்சுப்பதார்த்தங்கள் உடலால் உறுஞ்சப்பட்டு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துக்கின்றன.

“எங்களை அறியாமல் வர்த்தக நோக்கங்களுக்காக சந்தைகளில் விடப்பட்டுள்ள இவ்வாறான நச்சு இரசாயனங்களால், தொற்றா நோய்கள் நாடு முழுவதும் வேகமாக ஆட்கொண்டுவருகின்றது. இத்தொற்றா நோய் ஆபத்தானது, கொடிய யுத்தம் ஏற்படுத்திய அழிவை விட பாரதூரமான அழிவை ஏற்படுத்தி வருகிறது.

இதேவேளை, கல்வித்தரத்தில் உயா்ந்து செல்பவா்களும் கூடிய வருமான பெறுபவா்களுக்கும் இலங்கையில் அதிகமாக நோய்களின் தாக்கத்துக்கு ஆளாகுவதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X