2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நாட்கூலி தொழிலாளர்கள் பாதிப்பு!

Freelancer   / 2022 ஜூன் 01 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள அதிகமான உணவகங்கள் மற்றும் சிற்றூண்டி வியாபார நிலையங்களும் நீண்ட நாட்களாக மூடிய நிலையில் காணப்படுவதால் அவ் உணகங்களில் நாட்கூலி தொழிலாளர்களாக பணிபுரிவோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் தொழிலை இழந்துள்ளதால் அவர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு,  பிள்ளைகளும் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவுப் பொருட்களுக்கு என்றும் இல்லாதவாறு விலை அதிகரித்து காணப்படுவதால் நாளாந்த உணவுக்குக் கூட கஷ்டப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நடமாடும் சிற்றூண்டி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் தமது தொழிலை இழந்துள்ளனர்.

எனவே, ருமானத்தை இழந்த மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் 05 ஆயிரம் ரூபாய் மானியக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில்,  சிற்றூண்டி மற்றும் உணவகங்களில் நாளாந்த கூலி தொழிலாளர்களாக பணி புரிந்து தொழிலை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மானியக் கொடுப்பனவை வழங்குவதற்கும் முன்வர வேண்டும்.

இதேவேளை,  மண்ணென்ணெய் தட்டுப்பாடு காரணமாக தொழிலை இழந்துள்ள மீனவர்களுக்கும் இம்மானியக் கொடுப்பனவை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .