Editorial / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனின் பணிப்புரைக்கமைய, நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள சிகை அலங்கார, அழகுபடுத்தும் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கள், சிகை அலங்கார, அழகுபடுத்தும் நிலையங்களின் ஊடாக பரவலாம் எனும் அச்சத்தின் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் நோக்குடன், இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜே.மதன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் பிரதேசத்தில் செயற்பட்டு, சிகை அலங்கார, அழகுபடுத்தும் நிலையங்களுக்கு நேரில் சென்று, நேற்றிலிருந்து (22) மறு அறிவித்தல் வரை செயற்பட முடியாதவாறு மூடிவிடுமாறு அறிவுறுத்தல் வழங்கியதுடன், சீல்வைக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்தனர்.
13 minute ago
19 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
51 minute ago