2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நிந்தவூரில் வனஜீவராசி திணைக்களத்தின் உப அலுவலகம்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, நிந்தவூர் பிரதேச செயலகத்தில், வனஜீவராசிகள் திணைக்களத்தின் உப அலுவலகத்தைத் திறப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக உறுதியளித்துள்ளாரென, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, கல்முனை ஆகிய பிரதேசங்களில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்கள் அசௌகரீகங்களை எதிர்கொள்வதோடு, பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காட்டுயானைகளின் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு நிந்தவூர் பிரதேச செயலகத்தை மையப்படுத்தியவாறு, வனஜீவராசிகள் திணைக்களத்தின் உப அலுவலகத்தைத் திறந்து, உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு, இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயகவிடம் விடுத்த கோரிக்கைகமைய உப அலுவலகம் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த அலுவலகம் திறக்கப்படும் பட்சத்தில், மேற்படி பிரதேசங்களில் அதிகரித்துக் காணப்படும் காட்டுயானைகளின் தொல்லையை இலகுவாக கட்டுப்படுத்த முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .