2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நிவாரணத்துக்கான கலந்துரையாடல்

வி.சுகிர்தகுமார்   / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பொத்துவில் கிராம மக்களுக்கான நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் விசேட கலந்துரையாடல், தவிசாளர் அப்துல் வாசித் தலைமையில் பொத்துவில் பிரதேச சபையில் நேற்று முன்தினம் (09) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், உப தவிசாளர் பி.பார்த்தீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகளை பெற்றுக்கொடுத்தல், இடப்பெயர்வை எதிர்கொண்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவு வழங்கல், பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களை பிரதேச செயலகத்தினூடாகப் பெற்று, மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைத்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .