Editorial / 2019 ஜூலை 19 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
நீண்டநாள் வரட்சிக்குப் பின்னர், அம்பாறை மாவட்டத்தில் நேற்று(18) பலத்த மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், நேற்று மாலை பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வௌ்ளநீரில் மூழ்கியுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வரட்சி நிலவியால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.
அம்பாறை மாவட்டத்தில் வரட்சி நீடித்ததால், விவசாயச் செய்கை, மேட்டு நிலப் பயிர்ச் செய்கை போன்றன வெகுவாகப் பாதிக்கப்பட்டன. நீர் நிலைகள் வற்றி வரண்டு காணப்பட்டன. குடிநீருக்காக சில பிரதேச மக்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர்த் தேவையை பூர்த்திச் செய்தனர்.
கால் நடைகள் நீரின்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தன. போதிய மழை வீழ்ச்சி மற்றும் நீர் நிலைகளில் போதிய நீர் இன்மையால் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயச் செய்கையை இம்மாவட்ட மக்கள் கைவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
24 minute ago
26 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
26 minute ago
29 minute ago