Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அம்பாறை, அக்கரைப்பற்று கிழக்கு கமநலசேவைத் திணைக்களத்துக்குட்பட்ட நீத்தையாறு தென்கண்டத்தில் மேற்கொள்ளபட்ட 650 ஏக்கர் நெற்காணியும் தோணிக்கல்மேல், நீத்தையாறு மேல் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிகளவான வேளாண்மை செய்கையும், நீரின்றி கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, விவசாய அமைப்புகளும் விவசாயிகளும் கவலை தெரிவித்தனர்.
அரசாங்கம் பல்வேறு உதவிகளையும் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்ற நிலையில், இவருட சிறுபோகச் செய்கையின் பொருட்டு, மாவட்டச் செயலாளர், நீர்ப்பாசன பொறியியலாளராலும் அனுமதியளிக்கப்பட்ட இக்காணிகளுக்கே, இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
பன்னலகம நீர்த்தேக்க நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்தி நெற்செய்கை மேற்கொள்ளப்படும் குறித்த விவசாய நிலங்களுக்கு, 2017, 2018, 2019ஆம் ஆண்டுகளில் நீர்ப்பாசனம் வழங்க அனுமதி வழங்கப்படவில்லை.
எனினும், இவ்வாண்டில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஆரம்பக் கூட்ட தீர்மானத்தின்படி, விதைப்புக்கான முதலாவதுகட்ட நீர் வழங்கப்பட்டதாகவும் அதனை பயன்படுத்தி, நெற் செய்கையை மேற்கொண்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆனால், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நெற்செய்கை மேற்கொண்டு, 25 நாள்கள் கடந்த நிலையில் இரண்டவாதாக வழங்கவேண்டிய முளைத்தண்ணீரோ மூன்றாவதாக வழங்க வேண்டிய பசளைக்கான நீரோ வழங்கப்படவில்லை எனவும் இதனால் பயிர்கள் அனைத்தும் செத்துமடியும் நிலைக்கு சென்றுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
50 minute ago
52 minute ago
1 hours ago