Princiya Dixci / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீகே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்டத்தில் அதிக விளைச்சலையும் மிக உச்சக்கட்ட பயனையும் தரக்கூடிய “நெல் நாற்று நடுகை” மூலமான நெற்செய்கையை, விவசாயிகள் மத்தியில் விழிப்புணா்வையும் ஆலோசனையும் களப்பயிற்சிகளையும் விவசாய திணைக்களம் நடத்தி வருகின்றது.
இதற்கமைவாக, அக்கரைப்பற்று, களவெட்டியா கண்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட களப்பயிற்சி, ஓய்வுபெற்ற விவசாய உத்தியோகஸ்தர் (விதை நெல்) எம்.ஐ. நசீர் தலைமையில், இன்று (19) காலை நடைபெற்றது.
விவசாயத் திணைக்கைக்களத்தின் அம்பாறை மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் எம்.எப்.எ சனிர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், விவசாய உத்தியோகஸ்தர்கள், விவசயப் பாடவிதான உத்தியோகஸ்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, நாற்றுமேடை தயாரித்தல், விதை நெல் அளவிடு, பராமரிதத்தல், அவைகளைக் கையாளும் முறை, நெல்நாற்று நடுகை இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது, அதனது தொழில்நுட்பமுறைகள் பற்றிய விளக்கங்கள், அளிக்கப்பட்டதோடு, செய்கை முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026