2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆயுர்வேத மருந்துகள் கையளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ், பாறுக் ஷிஹான்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனுசரணையுடன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய இம்முனோ வூஸ்டர் (IMMUNO BOOSTER) எனும் ஆயுர்வேத மருந்து, கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு, கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (14) நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு, கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்வழங்கள் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் கலந்துகொண்டு, ஆயுர்வேத மருந்து பொருள்களைக் கையளித்தார்.

மேலும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ஜி.சுகுணன், கல்முனை பிராந்திய சுதேச வைத்திய துறைக்கான இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ நபீல் பிராந்திய சுகாதார திணைக்கள கணக்காளர் எம்.பாரிஸ், கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.வை இஸ்சாக், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் எம்.சி நஜீம், நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல்.பதியுத்தீன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர்  நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .