Freelancer / 2026 மே 08 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று ஆதரவை வழங்கிய நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற ஏனைய கட்சிகளிடம் ஆதரவை கோரிவந்தது தவெக.
இதில் காங்கிரஸ் நேற்றுமுன்தினம் ஆதரவு தெரிவித்த நிலையில், நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக சிபிஐ-யும் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் தவெக கூட்டணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 115-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 4 பேர் விஜய்க்கு ஆதரவு அளிக்கவேண்டும்.
இதேவேளை தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் ஆளுநரை விஜய் சந்திக்க உள்ளார் என்றும் கூறப்படுகின்றது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .