2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நிதி உதவி வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 18 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் அல்- அஸ்ஸாதிக் வித்தியாலயத்துக்கு காணி கொள்வனவு செய்வதற்காக பொத்துவில் நன்நோக்கு அமைப்பும், தில்ஸாத் அகமட் பௌண்டேசன் அமைப்பும் இணைந்து, முதற்கட்டமாக 03 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பொத்துவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளருமான எம்.எஸ்.ஏ. வாஸீத், இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.
 
பொத்துவில் பழைய தபாலக முன் வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டத்தில் 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தரம் 01 தொடக்கம் 04 வரையான வகுப்புகளில் 242 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில் இப்பாடசாலை, கிராம அபிவிருத்தி சங்க கட்டடம் மற்றும் அருகிலுள்ள தனியார் கல்வி நிலையம் ஆகியவற்றிலுள்ள தகர கொட்டில்களில் தற்காலிகமாக இயங்கி வருகின்றது.
 
இப் பாடசாலைக்குப் புதிய கட்டடம் நிர்மாணிப்பதற்காக காணி கொள்வனவுக்கு நிதி திரட்டும் முகமாக சனசமூக நடை பயணம், கடந்த புதன்கிழமை (09) பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம். முஸர்ரத் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X