Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இ.சுதாகரன்
துறைநீலாவணைக் கிராமத்திலிருந்து அன்னமலைக்கிராமம் வரையிலான நீர் மார்க்க பயணப்பாதைக்கான படகுச் சேவையினை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.
கடந்த காலங்களில் குறித்த படகுச் சேவையானதுமக்களின் பிரயாணத்திற்கு உந்து சக்தியாகஅமைந்தது.ஆனால், பலவருடகாலமாக குறித்த படகுச் சேவையானது கைவிடப்பட்டிருந்தன. இது வரைக்கும் குறித்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்படாமல் இருப்பது வேதனைதரக் கூடிய விடமாகும்.
துறைநீலாவணைக் கிராமத்திலிருந்து குடியேற்றக் கிராமங்களுக்கு இலகுவாகக் செல்லக் கூடியமிகவும் குறுகிய பயணப்பாதை மாத்திரமல்லாது, நெல் குற்றி விற்பனை செய்யும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பொருளாதார, அபிவிருத்திற்கு பாரிய பங்களிப்பினைச் செய்யும்.
குறித்த படகுச் சேவை தொடர்பாக யாரையும் குறை கூறவில்லை.ஆனால், எதிர் காலத்தில் குறித்த தரை மார்க்கமான பயணப் பாதையினை மீண்டும் ஆரம்பித்து பிரதேச மக்களின் தேவையினை நிறைவேற்றுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .