Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மார்ச் 29 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலுநர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும், பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம் என,
அம்பாறை மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர்களாக வி.ஜெகதீஷன், ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலுநர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களால், நேற்று (28) வினவப்பட்டபோதே, இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம், 3ஆம் கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரி பயிலுநர்கள் அனைவரும், நாளை (30), அம்பாறை மாவட்டத்திலுள்ள எந்தவொரு பிரதேச செயலகங்கலுக்கும் வரவேண்டாம் என்றும் அனைவரும் தங்களின் கிராம சேவர்களிடம் வங்கி கணக்கு இலக்கம், அடையாள அட்டை பிரதி, கல்விச் சான்றுதழ்களின் பிரதிகளை எடுத்து சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இது சம்மந்தமான அறிவுறுத்தல்கள் அனைத்தும் அந்தந்த பிரதேச செயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதே வேளை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago