Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2021 நவம்பர் 07 , பி.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காரணமாக வேலைகள் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள தென்கிழக்கு கல்விப் பேரவை, இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளதாக பேரவையின் தலைவர் ஏ.எல்.எம்.முக்தார், இன்று (07) தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் செயலாளரைத் தவிர சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவரும் உதவிச் செயலாளர்கள் இருவரும் கடமையில் இருக்க வேண்டும்.
“ஆனால், தற்போது இந்த அமைச்சில் ஒரு சிரேஷ்ட உதவிச் செயலாளரும் ஒரு உதவிச் செயலாளரும் ஒரு பதில் உதவிச் செயலாளரும் கடமையில் உள்ளனர்.
“நிர்வாக ஏற்பாடுகளுக்கமைய ஒரு விடயம் உதவிச் செயலாளர் ஊடாக சிரேஷ்ட உதவி செயலாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் செயலாளருக்கு இறுதி ஒப்பத்துக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
“ஆனால், தற்போதைய சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒரு சட்டத்தரணி என்பதால் கல்வி அமைச்சு சார்பில் நீதிமன்றம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் ஆஜராகி வருகிறார்.
“அதேவேளை, கடமையில் உள்ள ஒரு உதவிச் செயலாளர் அமைச்சுக்கு சமுகமளிப்பதில் அக்கறையின்றி உள்ளார். இந்த நிலையில், கல்வி அமைச்சின் பணிகள் யாவும் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago