எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஜனவரி 03 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு உள்ளகக் கணக்குப் பரிசோதகர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக, நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் மாநகர சபை உறுப்பினர் என்.எம். சிறாஜ், இன்று (03) தெரிவித்தார்.
இது தொடர்பாக அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ. அஹமட் சக்கியிடம் எழுத்துமூலமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அக்கரைப்பற்று மாநகர சபையில் கடந்த காலங்களில் உள்ளகக் கணக்குப் பரிசோதகர் ஒருவர் இல்லாத நிலை காணப்பட்டதாகவும் இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், உள்ளகக் கணக்குப் பரிசோதகர் ஒருவரை உடனடியாக நியமனம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபையின் நடவடிக்கைகளை நிதிப்பிரமாணங்களின் அடிப்படையில் ஒழுங்குபடுத்துவதற்கு இது மேலும் உதவி செய்யும் எனவும் அனைவரது பொறுப்புக் கூறும் தன்மையை இது உறுதிப்படுத்தும் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். இதுவிடயத்தில் கூடிய கரிசனை செலுத்துமாறு கோரிக்கைக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .